யாதும் ஊரே

யாதும் ஊரே
அகில உலக உயிரின தொடக்கம்
அனைத்தும் ஒற்றை புள்ளியில் விரிந்த கோலம்
அனைத்து மொழிகளும் ஏதோஒரு
தாய்மொழியின் தத்து பிள்ளைகள்!
 
 
உலகின் ஒராயிரம் இனங்களும் ஏதோஒரு
ஒற்றை இனத்தின் மாற்று உருவங்கள்
மாறுபட்ட உருவங்கள் மாற்று கருத்துகள்
மாறாதது பசியும் பிணியும்!
 
 
எல்லைகள் அற்ற ஓர் உலகம் சாத்தியமா
பறவைகளை போல் விலங்கினங்களை போல்
மனிதனுக்கும் கட்டுபாடற்ற பயணம் சாத்தியமா
மனிதம் எழுச்சி பெறுமா?
 
 
அறிவும் ஆற்றலும் பகிரபட வேண்டுமெனில்
உலகில் கட்டணமில்லா கல்வி சாத்தியமா
கருணைமிக்க மருத்துவம் சாத்தியமா -அல்ல
கருணையும் கடைகளில் விற்கப்படுமோ?
 
 
உலகம் அனைவருக்கும் பொது வெனில்
இருப்பதும் இல்லாதும் பகிரபட வேண்டுமா
இருப்பதும் இல்லாதும் விற்கபட வேண்டுமா
பண்டமாற்றை தூசு தட்டலாமா?
 
 
நிலையில்லா வாழ்க்கையில்
மொழி மறந்து
இனம் மறந்து
மதம் மறந்து
எல்லைகள் மறந்து
கொடிகள் மறந்து
வாழட்டும் மனிதன்
காதல் மட்டும்
கை கொண்டு
உலக ஊரின்
குடிமகனாய்!!!
Continue Reading

அவளை பற்றி

அவளை பற்றி

அவளை பற்றி கவி எழுதும்

ஆசை அறவே இல்லை எனக்கு

ஆனாலும் கூட,

அவள் நினைவில்என்

எழுதுகோல் மைப்பட்டு கருவுருகின்றன காகிதமெல்லாம்..

 

அவளை பற்றி வர்ணிக்க வார்த்தைகள் தேடினேன்

தொன் மொழியாம் கன்னிதமிழ் கைவிரித்தது

உலக மொழிகளலெல்லாம் ஒடி ஒழிகின்றன

புது மொழி வேண்டும் இனி அவளை வர்ணிக்க..

 

குமரி கண்டம் விட்டுச்சென்ற சொச்சம் அவள்

மேற்கத்திய கலாசாரமெல்லாம் அவள் முன்னால்

மண்டியிட்டு அழுகின்றனபாவமடி

உன் கலாசாரத்தின் கடைகண் காட்டு

மேற்கத்தியம் மோட்சம் பெறட்டும்

Continue Reading

பாரதி

பாரதி

எட்டையபுரத்தில் மட்டும் ஒரு தாய்க்கு
நெருப்பை சுமந்த கருப்பை என்று
வைரமுத்து உன் பிறப்பை புனைந்தது
மிகையாகாது!

நூற்றாண்டு கடந்தும் நாங்கள்
உன்னை தான் துணைக்கு அழைக்கிறோம்
பெண்ணிய பெருமை பேச
சாதி தீ விரட்ட
கண்ணம்மாவோடு காதல் பேச
வீரத்தோடு விவேகம் பேச

வசன கவிதைகளின் தலைமகனே
உன்னை வணங்குகிறேன்உன்
பிறந்தநாளில்!

Continue Reading