யாதும் ஊரே

யாதும் ஊரே
அகில உலக உயிரின தொடக்கம்
அனைத்தும் ஒற்றை புள்ளியில் விரிந்த கோலம்
அனைத்து மொழிகளும் ஏதோஒரு
தாய்மொழியின் தத்து பிள்ளைகள்!
 
 
உலகின் ஒராயிரம் இனங்களும் ஏதோஒரு
ஒற்றை இனத்தின் மாற்று உருவங்கள்
மாறுபட்ட உருவங்கள் மாற்று கருத்துகள்
மாறாதது பசியும் பிணியும்!
 
 
எல்லைகள் அற்ற ஓர் உலகம் சாத்தியமா
பறவைகளை போல் விலங்கினங்களை போல்
மனிதனுக்கும் கட்டுபாடற்ற பயணம் சாத்தியமா
மனிதம் எழுச்சி பெறுமா?
 
 
அறிவும் ஆற்றலும் பகிரபட வேண்டுமெனில்
உலகில் கட்டணமில்லா கல்வி சாத்தியமா
கருணைமிக்க மருத்துவம் சாத்தியமா -அல்ல
கருணையும் கடைகளில் விற்கப்படுமோ?
 
 
உலகம் அனைவருக்கும் பொது வெனில்
இருப்பதும் இல்லாதும் பகிரபட வேண்டுமா
இருப்பதும் இல்லாதும் விற்கபட வேண்டுமா
பண்டமாற்றை தூசு தட்டலாமா?
 
 
நிலையில்லா வாழ்க்கையில்
மொழி மறந்து
இனம் மறந்து
மதம் மறந்து
எல்லைகள் மறந்து
கொடிகள் மறந்து
வாழட்டும் மனிதன்
காதல் மட்டும்
கை கொண்டு
உலக ஊரின்
குடிமகனாய்!!!

You may also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *