யாதும் ஊரே

யாதும் ஊரே
அகில உலக உயிரின தொடக்கம்
அனைத்தும் ஒற்றை புள்ளியில் விரிந்த கோலம்
அனைத்து மொழிகளும் ஏதோஒரு
தாய்மொழியின் தத்து பிள்ளைகள்!
 
 
உலகின் ஒராயிரம் இனங்களும் ஏதோஒரு
ஒற்றை இனத்தின் மாற்று உருவங்கள்
மாறுபட்ட உருவங்கள் மாற்று கருத்துகள்
மாறாதது பசியும் பிணியும்!
 
 
எல்லைகள் அற்ற ஓர் உலகம் சாத்தியமா
பறவைகளை போல் விலங்கினங்களை போல்
மனிதனுக்கும் கட்டுபாடற்ற பயணம் சாத்தியமா
மனிதம் எழுச்சி பெறுமா?
 
 
அறிவும் ஆற்றலும் பகிரபட வேண்டுமெனில்
உலகில் கட்டணமில்லா கல்வி சாத்தியமா
கருணைமிக்க மருத்துவம் சாத்தியமா -அல்ல
கருணையும் கடைகளில் விற்கப்படுமோ?
 
 
உலகம் அனைவருக்கும் பொது வெனில்
இருப்பதும் இல்லாதும் பகிரபட வேண்டுமா
இருப்பதும் இல்லாதும் விற்கபட வேண்டுமா
பண்டமாற்றை தூசு தட்டலாமா?
 
 
நிலையில்லா வாழ்க்கையில்
மொழி மறந்து
இனம் மறந்து
மதம் மறந்து
எல்லைகள் மறந்து
கொடிகள் மறந்து
வாழட்டும் மனிதன்
காதல் மட்டும்
கை கொண்டு
உலக ஊரின்
குடிமகனாய்!!!
Continue Reading

அவளை பற்றி

அவளை பற்றி

அவளை பற்றி கவி எழுதும்

ஆசை அறவே இல்லை எனக்கு

ஆனாலும் கூட,

அவள் நினைவில்என்

எழுதுகோல் மைப்பட்டு கருவுருகின்றன காகிதமெல்லாம்..

 

அவளை பற்றி வர்ணிக்க வார்த்தைகள் தேடினேன்

தொன் மொழியாம் கன்னிதமிழ் கைவிரித்தது

உலக மொழிகளலெல்லாம் ஒடி ஒழிகின்றன

புது மொழி வேண்டும் இனி அவளை வர்ணிக்க..

 

குமரி கண்டம் விட்டுச்சென்ற சொச்சம் அவள்

மேற்கத்திய கலாசாரமெல்லாம் அவள் முன்னால்

மண்டியிட்டு அழுகின்றனபாவமடி

உன் கலாசாரத்தின் கடைகண் காட்டு

மேற்கத்தியம் மோட்சம் பெறட்டும்

Continue Reading

பாரதி

பாரதி

எட்டையபுரத்தில் மட்டும் ஒரு தாய்க்கு
நெருப்பை சுமந்த கருப்பை என்று
வைரமுத்து உன் பிறப்பை புனைந்தது
மிகையாகாது!

நூற்றாண்டு கடந்தும் நாங்கள்
உன்னை தான் துணைக்கு அழைக்கிறோம்
பெண்ணிய பெருமை பேச
சாதி தீ விரட்ட
கண்ணம்மாவோடு காதல் பேச
வீரத்தோடு விவேகம் பேச

வசன கவிதைகளின் தலைமகனே
உன்னை வணங்குகிறேன்உன்
பிறந்தநாளில்!

Continue Reading

தாய்மை

தாய்மை

நான் யார் உனக்கு?
நம் தம்மில் பந்தம் உண்டோ
நல்ல பரிச்சியம் உண்டோ
நாம் கண்டது உண்டோ

என் தாய்மொழி கூட
நீ அறிந்திடவில்லை
என் விலாசம் பற்றி
உனக்கு கவலையில்லை

உன் குரலை நான் கேட்டது -இதுவே முதல் முறை
உனக்கு பிடித்த உணவை சமைக்கிறேன்
எப்போது வருகிறாய் புசிப்பதற்கு என்றாயே?
தாய்மை தரணியின் உயிர்பு!

Continue Reading

அந்நியன்

When we were born,
everyone were strangers,
except mother..

அந்நியன்- Stranger
———-*———
உன்னை அந்நியன் என எங்ஙனம் கூறுவேன்
உனக்கும் எனக்கும் அறிமுகம் இல்லையாம்
இருளுக்கா ஒளியை அறிமுகம் செய்வது?
இருள் இல்லாமல் ஒளி எதற்கு!

உன்னை அந்நியன் என எங்ஙனம் கூறுவேன்
நீயும் நானும் பேசவே இல்லையாம்
மலரும் மதுவும் பேசவா வேண்டும்
மலரில்லையேல் மது ஏது?

உன்னை அந்நியன் என எங்ஙனம் கூறுவேன்
நீயும் நானும் சந்திப்பதே இல்லையாம்
அலையும் கரையும் சந்திக்கவா வேண்டும்
கரையில்லையேல் அலை ஏது?

இருளும் ஒளியும் போல
மலரும் மதுவும் போல
அலையும் கரையும் போல
சிந்தையும் செயலும் போல
என்னுள் நிறைந்தே இருக்கும்
உன்னை அந்நியன் என எங்ஙனம் கூறுவேன்

Continue Reading

தேவதை கதை

வா வசப்பட்டு கொள்வோம்
நித்திரை களைவோம்
நீண்ட நெடிய ஓர் இரவுபொழுதில் – பேசிக்கொள்ளட்டும்
உன்னை பற்றியே சிந்திக்கும் என் சிந்தையும்
என்னை பற்றியே அறியாத உன் சிந்தையும்

வா வாய்களை மூடி மெளனத்தை ரசிப்போம்
நம் இரு கைகளும் அந்த கால பேரம் பேசட்டும்
நான் என் விழிகளில் உன்னை சிறை எடுக்கிறேன்
நீ உன் கருவிழி கொண்டு என் சித்தம் தெளி

பால பருவத்தில் அரசன் கதை எல்லாம் அப்பாதான் சொல்வார்
நீ ஒரு அம்புலி கதை சொல்லேன்
தேவதை கதை சொல்லி நான் கேட்டதில்லை..

Continue Reading

அவளும் நானும்

அவளும் நானும்
ஆண்மையும் வீரமும்
இசையும் இனிமையும்
ஈகையும் தேவையும்
உழைப்பும் உயர்வும்
ஊடலும் காதலும்
எழுத்தும் பொருளும்
ஏற்றமும் இறைப்பும்
ஐயும் பெண்மையும்
ஒருமையும் தனிமையும்
ஓடமும் நதியும்
ஓளடதமும் பிணியும்
கம்பனும் கவியும்
மலையும் முகடும்
மடுவும் கரையும்
விடலையும் வேகமும்
முதுமையும் தளர்வும்
தமிழும் பழமையும்
நீயும் நானும் !

Continue Reading